'புஷ்பா' ஓடிடி ரிலீஸ் எப்போது? அமேசானின் அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த ’புஷ்பா’ திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 17ஆம் தேதி ரிலீஸ் ஆனது என்பதும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி அனைத்து மொழிகளிலும் சூப்பர் ஹிட் ஆகியது என்பது தற்போதும் வசூலை குவித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’புஷ்பா’ திரைப்படம் ரிலீஸ் ஆகி மூன்று வாரங்கள் ஆகி விட்ட நிலையில் இந்த படம் விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் என தகவல் வெளியானது. இந்த நிலையில் சற்று முன்னர் அமேசான் ஓடிடியின் சமூக வலைதளப் பக்கத்தில் ’புஷ்பா’ திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி முதல் அதாவது நாளை மறுநாள் முதல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘புஷ்பா’ திரைப்படம் அமேசானில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளதை அடுத்து ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியில் காண மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
He’ll fight. He’ll run. He’ll jump. But he won’t succumb! ??
— amazon prime video IN (@PrimeVideoIN) January 5, 2022
Watch #PushpaOnPrime, Jan. 7
In Telugu, Tamil, Malayalam and Kannada@alluarjun #FahadhFaasil @iamRashmika@Dhananjayaka #Suneel #AjayGhosh #RaoRamesh @OG_Jagadeesh @ShatruActor @anusuyakhasba #Sritej #MimeGopi pic.twitter.com/lVxoE7DJSs
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments