ஸ்ரீதேவி புலிகபூர் ஆக மாறிய ஸ்ரீதேவி போனிகபூர்

  • IndiaGlitz, [Wednesday,August 26 2015]

விஜய் நடித்துள்ள 'புலி' படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர் என்றால் அது ஸ்ரீதேவி கேரக்டர்தான் என படக்குழுவினர் அனைவரும் கூறி வரும் நிலையில், ஸ்ரீதேவியே இந்த படத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. அது எந்த அளவுக்கு என்றால், தன்னுடைய சமூக வலைத்தளத்தில் 'ஸ்ரீதேவி போனிகபூர்' என்று இருந்த தன்னுடைய பெயரை தற்போது 'ஸ்ரீதேவி புலிகபூர்' என்று மாற்றி வைத்துள்ளார். அந்த அளவுக்கு புலி' திரைப்படம் அவரை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஸ்ரீதேவிக்காக படக்குழுவினர்களும் தங்களுடைய அதிகப்படியான ஒத்துழைப்பை கொடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. அவர் இந்த படத்தில் நடிக்க கேட்ட மிகப்பெரிய சம்பளம், அவர் விரும்பிய மேக்கப்மேன், அவருடைய கேரக்டருக்கு அதிகப்படியான முக்கியத்துவம் மற்றும் அவர் போட்ட அனைத்து கண்டிஷன்களுக்கும் புலி படக்குழு சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிபேசும் மாநிலங்களிலும் ஸ்ரீதேவி பிரபலமாக இருப்பதால் அவரது பெயர் இந்த படத்தின் வியாபாரத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தளத்திலேயே 'புலி'யின் பெயருடன் தன்னுடைய பெயரை இணைத்து கொண்டதே இந்த படத்திற்கு ஒரு மிகப்பெரிய விளம்பரமாக கருதப்படுகிறது.

More News

அரசு செலவில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம். முதல்வர் அறிவிப்பு

தமிழ் திரையுலகில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தாதா சாகேப் பால்கே என்ற உயரிய விருது பெற்று தமிழர்களுக்கும்...

சன்னிலியோனை பின்னுக்கு தள்ளிய ரஜினி நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான 'கபாலி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவிருக்கும் நடிகை ராதிகா ஆப்தே...

சென்னை மருத்துவமனையில் அஜீத் படப்பிடிப்பு

அஜீத் நடித்து வரும் 'தல 56' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நோக்கி நடைபெற்று வருகிறது என்பதை ஏற்கனவே பார்த்தோம். கடந்த திங்கள்...

கேரள விஜய் ரசிகர்களுக்கு 'புலி' தரும் ஓணம் விருந்து

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பதை அதன் டிரைலருக்கு கிடைத்த வரவேற்பில்...

விஷாலுடன் இணையும் சிவகார்த்திகேயன்?

பூஜை, ஆம்பள படங்களை அடுத்து விஷால் தனது 'பாயும் புலி' படத்தை வரும் செப்டம்பர் 4ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறார்...