அசுர வேகத்தில் உடல் எடையை குறைக்க உதவும் ஸ்கிப்பிங் விளையாட்டு? எளிய டிப்ஸ்!
- IndiaGlitz, [Wednesday,June 30 2021]
சிறிய வயதில் கையில் கிடைக்கும் கயிறுகளை வைத்துக் கொண்டு ஸ்கிப்பிங் விளையாடி இருப்போம். சிலர் பள்ளி, கல்லூரிகளில் இந்த விளையாட்டை ஆவலோடு விளையாடி இருக்கலாம். ஆனால் வளர்ந்து விட்ட பின்னர் இதையெல்லாம் அப்படியே மறந்து விட்டு உடல் எடையைக் குறைப்பதற்காக நடையாக நடந்து கொண்டு இருக்கிறோம். அதுவும் கொரோனா நேரத்தில் கூடிவிட்ட உடல் பருமனைக் குறைப்பதற்காக சிலர் படாதபாடு படுகின்றனர்.
இந்நிலையில் ஸ்கிப்பிங் விளையாட்டின் மூலம் எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு தென் கொரியாவின் நசரேன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஸ்கிப்பிங் விளையாட்டு எளிதாக உடல் பருமனைக் குறைப்பதோடு அவர்களின் நுரையீரல் செயல்பாடிற்கும் இதய செயல்பாட்டிற்கும் பெரும் உதவியாக இருப்பதை அந்த ஆய்வு நிரூபித்து இருக்கிறது.
மேலும் 10 நிமிடத்திற்கு ஸ்கிப்பிங் செய்வது ஒருநபர் 8 கிலோ மீட்டர் ஓடுவதற்கு சமம் என்றும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இதனால் ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வதன் மூலம் மிக எளிதாக உடலில் உள்ள 1,600 கலோரிகளை எரிக்க முடியும் என்றும் தெரிவித்து உள்ளனர்.
ஸ்கிப்பிங் என்பது உடல் முழுவதையும் செயல்பட வைக்கக்கூடிய ஒரு விளையாட்டாக இருக்கிறது. இதனால் கை, கால்கள், என அனைத்து உறுப்புகளும் இயங்கி, எலும்பையும் வலிமையாக்குவதற்கு இந்த விளையாட்டு உதவுகிறது.
இதை ஒரு உடற்பயிற்சியாகத் தொடர்ந்து செய்யும்போது உடல் பருமனை அசுர வேகத்தில் குறைக்க முடியும் என்றும் எதிர்காலத்தில் வரும் உடல் பாதிப்புகளை குறைக்க இது உதவும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மற்ற உடற்பயிற்சி கருவிகளை பயன்படுத்தும்போது ஒருவித வலியோடு உடற்பயிற்சி செய்ய வேண்டி இருக்கும். ஆனால் ஸ்கிப்பிங் என்பது ஒரு கயிற்றைக் கொண்டு விளையாட்டுத் தனமாகவே செய்யலாம். இதனால் ஸ்கிப்பிங் என்ற விளையாட்டை நாள்தோறும் உடற்பயிற்சியோடு சேர்த்துக் கொள்வது நலம்.
அதோடு வயிற்றில் அதிகரித்து இருக்கும் சதைப் பகுதியையும் இந்த ஸ்கிப்பிங் விளையாட்டு மிக எளிதாக குறைத்து விடுகிறது. அதாவது ஒருவர் ஸ்கிப்பிங் விளையாடுபோது ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் வயிற்றுப் பகுதிக்குள் வைத்து அழுத்துகிறார். இதனால் தொப்பை எளிமையாக காணமால் போய்விடுகிறது.
ஸ்கிப்பிங் செய்யும் போது இயதத் துடிப்பு சீராகிறது. இதனால் இருதய ஆரோக்கியம் மேம்படவும் இந்த விளையாட்டு உறுதுணையாக இருக்கும்.
பொதுவா பெண்கள் இந்த விளையாட்டை விளையாடக் கூடாது என்று ஒருசில நம்பிக்கை இருந்து வருகிறது. ஆனால் பெண்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தை குறைத்து அவர்களின் எலும்புகளை வலிமை ஆக்குவதற்கு இந்த விளையாட்டு அவசியம் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வேறு எந்த உடற்பயிற்சியை விடவும் உடலின் அனைத்து பகுதிகளின் இயக்கத்திற்கும் இந்த ஸ்கிப்பிங் உதவும் என்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைப்பதற்கு இந்த பயிற்சி எளிமையானது.
மேலும் உடலை மிக வேகமாக இயக்குவதால் இது உணவு செரிமானத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது.
ஒருநபர் ஸ்கிப்பிங் விளையாடும்போது கயிறு முன்னும் பின்னும் ஒரே சீரான வேகத்தில் சென்று வர வேண்டும். இதனால் அந்த நபருக்கு கவனச்சிதறல் ஏற்படுவதற்கு வாய்ப்பே இருக்காது. அந்த வகையில் ஒருங்கிணைந்த எளிமையான மன ஆரோக்கியத்திற்கும் இந்த ஸ்கிப்பிங் விளையாட்டு வழிகோலுகிறது.
உடல் பருமன் கொண்ட எல்லோருக்கும் இருக்கும் பெரிய பிரச்சனை தொப்பை. இந்தத் தொப்பையை ஒரு எளிய விளையாட்டில் மூலம் குறைக்க முடியும் என்றால் அது ஸ்கிப்பிங் விளையாட்டினால் மட்டுமே முடியும். எனவே அலட்டிக் கொள்ளாமல் இதை ஒரு பயிற்சியாக செய்யலாம்.
மேலும் ஸ்கிப்பிங் என்பது ஒரு Cardio Exercise போன்றதுதான என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் சீரான சுவாசத்தை ஏற்படுத்தி இருதயக் கோளாறு ஏற்படாமல் இதயத்தை (strengthens the hear) இந்த பயிற்சி வலிமைப்படுத்துகிறது.
கொரோனா நேரத்தில் பலரும் மன அழுத்தத்தோடு வீடுகளில் முடங்கி கிடக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. இதனால் உடற்பயிற்சி என்ற வகையில் இல்லாமல் ஒரு விளையட்டாகக் கூட இதை எல்லோரும் செய்யலாம்.
மாடி தோட்டம், பால்கனி, வீட்டின் தரைத்தளங்கள் என இடம் இல்லாதவர்கள் கூட எளிமையாக இந்த பயிற்சியை செய்ய முடியும்.
மாதக் கணக்கில் ஜிம்மிற்கு காசு கொடுத்து கிடைக்கும் அனைத்துப் பலன்களும் ஒரு விளையாட்டில் கிடைக்கிறது என்றால் அதை பொருட்படுத்தாமல் விடலாமா? எனவே பிளாஸ்டிக் கயிற்றினால் செய்யப்படாத எளிமையான நூல் கயிற்றை வைத்து இந்த பயிற்சியை அனைவரும் இன்றைக்கே தொடங்குங்கள். மேலும் ஒருநபர் 15-25 நிமிடங்களுக்கு இதைச் செய்தாலோ மிகுதியான நன்மையைப் பெறமுடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.