பாஸ்மதி அரிசி மீது ஏன் இவ்வளவு காதல்? உடல் ஆரோக்கியத்தில் இதன் பங்கு என்ன?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியாவில் பெரும்பாலான நபர்களின் விருப்ப உணவாக தற்போது பிரியாணி மாறிவிட்டது. ஒருவேளை சைவ உணவுக்காரர்களாக இருந்தாலும் புலாவ் வகையான பிரியாணி உணவுகளைத்தான் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்நிலையில் பிரியாணிக்கு பெருமளவு பயன்படுத்தப்படும் பாஸ்மதி அரிசி குறித்து அறிந்து கொள்வது அவசியம்.
பாஸ்மதி அரிசி என்பது நீளமாகவும் அதே நேரத்தில் மென்மையாகவும் கூடுதலாக நறுமணத்துடன் இருக்கிறது.
மற்ற அரிசிகளைவிட பாஸ்மதி அரிசியில் ஒருவகையான நறுமண சுவை அதிகமாக இருப்பதையும் சுவை மிகுந்து காணப்படுவதையும் பல நேரங்களில் உணர்ந்திருப்போம். அதனால்தான் பாஸ்மதி அரிசி மக்கள் மத்தியில் அதிகம் புழங்கப்படும் ஒரு உணவு வகையாக மாறியிருக்கிறது.
பாஸ்மதி அரியில் மட்டும் ஏன் இந்த நறுமணம் என்ற கேள்வி எழலாம். அதற்கு அந்தவகை அரியில் இருக்கும் மரபணுக்களே காரணம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். மேலும் பாஸ்மதி அரிசிக்கு நறுமணங்களின் ராணி என்ற செல்ல பெயர் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த பாஸ்மதி அரிசியானது சமீபத்தில்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது என்ற கருத்து பொதுவாக இருந்தது வருகிறது. ஆனால் முகலாயப் பேரரசு காலத்திலேயே இந்த பாஸ்மதி அரிசி பயன்பாட்டுக்கு வந்துவிட்டதை வரலாறு சுட்டிக் காட்டியிருக்கின்றன.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற தொல்பொருள் ஆய்வுகளில் நீளமான பாஸ்மதி வகை அரிசிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. கி.மு 2,000-1,600 காலத்தைச் சேர்ந்த இந்த நீளமான அரிசிகள் பாஸ்மதி அரிசியின் முன்னோடியாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.
இந்நிலையில் பாஸ்மதி அரிசியின் சுவைக்கு 3 காரணங்கள் முக்கியமாகச் சொல்லப்படுகின்றன. மண்வகை, சாகுபடி முறை, வானிலை. இவை மூன்றும் சரியாக இருந்தால் மட்டுமே பாஸ்மதி அரிசியை சாகுபடி செய்ய முடியும்.
அந்த வகையில் பாஸ்மதி அரிசியானது குளிர்ந்த வானிலை கொண்ட இடங்களில் மட்டுமே விளைவிக்கப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளத்தில் மட்டுமே உற்பத்தியாகும் இந்த அரிசியானது இன்றைக்கு உலகம் முழுவதும் பரவலாக கிடைத்து வருகிறது.
இந்தியாவில் இமயமலை பள்ளத்தாக்கு, ஜம்மு, காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியாணா பகுதிகளில் மட்டுமே இந்த அரிசி விளைவிக்கப்படுகிறது. இதனால் இப்பகுதிகளுக்கு பாஸ்மதி மண்டலம் என்ற பெயரும் வைக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் பாஸ்மதி உற்பத்திக்கு இந்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்தும் இருக்கிறது.
பாஸ்மதி அரிசியை நீண்ட நாள் சேமித்து வைத்து சமைப்பதால் மட்டுமே அதிக சுவையுடன் இருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் அரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் உதிரியாகவும் மென்மையாகவும் இருப்பதற்கு காரணம் நீண்ட நாள் சேமித்து வைக்கப்படுவதும் முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்த பாஸ்மதி அரிசி வெள்ளை மற்றும் பழுப்பு என்று இரண்டு நிறங்களில் காணப்படுகிறது. அதன் தனித்துவமான பண்புக்காகவும் சுவைக்காகவும் நறுமணத்திற்காகவும் இன்று உலகம் முழுவதும் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
உடல் ஆரோக்கியம்
சாதாரணமாக அரிசி என்றாலே இன்றைக்கு பலரும் பயந்து ஓடும் நிலைமைதான் இருந்து வருகிறது. இந்நிலையில் பாஸ்மதி அரிசியில் உடல் ஆரோக்கியம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுவது இயல்புதான்.
இதுகுறித்து வெளியான பல ஆய்வுகள் பாஸ்மதி அரிசி மற்ற வகை அரிசிகளை விட உடல் நலத்திற்கு ஆரோக்கியமானவை என்றே கூறுகின்றன.
காரணம் பாஸ்மதி அரிசியில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீடு 50-58 வரை மட்டுமே காணப்படுகிறது. ஆனால் நாம் பயன்படுத்தும் மற்ற வகை அரிசிகளில் 79 குறியீடு வரைக்கும் இருக்கிறது.
உடல் எடையைக் குறைக்க நினைக்கும் பலரும் அரிசியில் இருக்கும் பைபர் காரணமாக அதை ஒதுக்கி வருகிறோம். ஆனால் பிரியாணி போன்ற உணவு வகைகளுக்கு மட்டுமே நாம் பயன்படுத்தும் பாஸ்மதி அரிசியில் சோடியம் குறைவாக இருக்கிறது. கொழுப்பு குறைவாக இருக்கிறது. கலோரி குறைவாக இருக்கிறது.
கணிசமான அளவில் நார்சத்தும் நிறைந்து காணப்படுகிறது. இதனால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களும் தொப்பையை குறைக்க நினைப்பவர்களும் சாதாரண அரிசிக்கு மாற்றாக இதை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் செரிமானம் ஆவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் மெதுவாகவே பசியெடுக்கும். இப்படி அதன் அம்சங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
நீரிழிவு நோயாளிகள் இந்த பாஸ்மதி அரிசியை அதிகமாகவே பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
இதிலிருக்கும் குறைந்த கொழுப்பு உயர் ரத்த அழுத்த அபாயத்தை குறைக்க உதவுகிறது.
பழுப்பு நிற பாஸ்மதி அரிசியில் நார்சத்து அதிகமாகவே காணப்படுகிறது. இதனால் புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கவும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை அகற்றவும் உதவுகிறது.
வைட்டமின் பி, பி1 அதிகம் இருப்பதால் மூளை ஆரோக்கியத்திற்கும் நல்லதாகக் கருதப்படுகிறது.
உடல் எடையை குறைக்க உதவும் நபர்கள் ஃபைபர் காரணங்களைத் தவிர்ப்பதற்காக பாஸ்மதியை தாராளமாக எடுத்துக்கொள்ளலாம்.
இவ்வளவு அம்சங்கள் இருக்கும் பாஸ்மதி அரிசியை சாதாரண அரிசிக்கு மாற்றாக பயன்படுத்தலாம் என்று பலரும் பரிந்துரைக்கின்றனர். ஆனால் இதில் இருக்கும் ஒரே குறைபாடு அதன் விலை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments