நேற்று நிலவு நடத்திய அற்புதமான கண்காட்சி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இயற்கை சில நேரங்களில் தனது அழக்கை காட்டி மனிதர்களை ஊற்சாகப்படுத்தும். அப்படியொரு நிகழ்வை நேற்று, நிலவு அரங்கேற்றியிருந்தது. பொதுவாக நிலவு காட்சித்தரும் அளவைவிட பெரிதாக்கிக் காட்டினால் அதற்கு Super Moon என்று பெயர். 2020 இல் கடந்த மார்ச் மாதத்தில் ஒரு “வார்ம் மூன்” மற்றும் ஏப்ரல் மாதத்தில் ஒரு “பிங் மூன்” என இரண்டு அற்புதமான கண்காட்சிகளையும் நிலவு நடத்தி முடித்திருக்கிறது.
நிலவின் நீள்வட்ட சுற்றுப்பாதையில் பூமிக்கு மிக நெருக்கமான புள்ளி பெரிஜி என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பகுதியை நிலவு நெருங்கும்போது வழக்கத்தைவிட பெரியதாக நிலவு தோன்றும். அப்படித் தோன்றும் நிலவை நாம் சூப்பர் மூன் என்று அழைக்கிறோம். நேற்று மே மாதத்தின் பௌர்ணமியில் நிலவு “Super Flower Moon” கண்காட்சியை நிலவு உலகம் முழுவதும் அரங்கேற்றி இருந்தது. இந்த வருடத்தின் கடைசி சூப்பர் மூன் இது என்பதும் குறிப்பிடத்தக்கது. வசந்த காலத்தில் நிலவு தன்னை பெரிதாக்கிக் காட்டுவதால் அதற்கு “Super Flower Moon” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதேபோன்ற நிகழ்வு அடுத்த வருடத்தில் ஏப்ரல் மாதத்தில்தான் நிகழும். நாசாவின் கணிப்புப்படி நேற்று மாலை 4.15 மணிக்கு இந்த அரங்கேற்றம் நிகழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
1.துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள கேம்லிகா மசூதிக்கு மேல் முழு நிலவு காட்சி.
2.அமெரிக்காவின் நியூயார் துறைமுகத்தில் உள்ள லிபர்ட்டி சிலைக்கு மேல் நிலவின் காட்சி
3.ரஷ்யாவின் மாஸ்கோ நகரத்தில் உள்ள ஒரு தேவாலய சிலுவைக்குப் பின்னால் சூப்பர் மூன்
4.லண்டனின் டவர் பிரிட்ஜ்க்கு நடுவில் சூப்பர் மூன்
5.ரமலான் நோன்பில் 14 ஆவது நாளில் ஜோர்டான் நகரத்து அம்மான் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் முழுநிலவு
6.மாஸ்கோவின் Lomonosov பல்கலைக்கழகத்திற்குப் பின்னால் ஒரு பறவை போல காட்சியளிக்கும் முழுநிலவு
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout