'அமரன்' திரையிட்ட தியேட்டரில் வெடிகுண்டு வீச்சு: பெரும் பரபரப்பு..!

  • IndiaGlitz, [Saturday,November 16 2024]

நெல்லையில் சிவகார்த்திகேயன் நடித்த 'அமரன்’ திரைப்படம் திரையிடும் தியேட்டரில் வெடிகுண்டு வீசியதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான 'அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் 300 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தில் சில காட்சிகள் சர்ச்சைக்குரியவாக இருக்கிறது என்று சில அமைப்புகள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், 'அமரன்’ திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், நெல்லையில் உள்ள ஒரு தியேட்டரில் 'அமரன்’ திரைப்படம் திரையிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அந்த தியேட்டரின் வாசலில் வெடிகுண்டு வீசப்பட்டதாகவும், பெட்ரோல் வெடிகுண்டை வீசிய மர்ம நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் வெடிகுண்டு வீசியது யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும்! சூப்பர் சிங்கர் ஜூனியர் தனது 10வது சீசன்..

விஜய் டிவியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் சிங்கர் ஜூனியர் தனது 10வது சீசனுடன் ஒளிபரப்பாகவுள்ளது!

ஜெயம் ரவி விவாகரத்து மனு இன்று விசாரணை.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் ஜெயம் ரவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்று ஏற்கனவே பார்த்தோம்.

கல்வித் துறை அமைச்சரிடம் பாராட்டு வாங்கிய மாணவி: சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன் !!

இதோ வந்துவிட்டது மழலைக் குரல்களின் இசை சங்கமம், தமிழக மக்களின் மனம் கவர்ந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 10 வது சீசன், வரும் 16 ஆம் தேதி மாலை கோலாகலமாக தொடங்குகிறது.

சீனாவில் ரிலீஸாகும் விஜய் சேதுபதியின் மாஸ் திரைப்படம்.. சூப்பர் போஸ்டர்..!

வெகு அரிதாகவே சீனாவில் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படம் சீனாவில் வெளியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டு

நயன்தாரா திருமண வீடியோ உள்பட இந்த வார ஓடிடி ஸ்பெஷல் என்னென்ன? முழு விவரங்கள்..!

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியான புதிய திரைப்படங்கள் ஓடிடியில் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் இந்த வாரம் நயன்தாராவின் திருமணம் வீடியோ வெளியாகி உள்ளது.