close
Choose your channels

கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம் எனக்கும் அவனுக்கும்: 'அமரன்' சாய் பல்லவி வீடியோ..!

Friday, September 27, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த "அமரன்" திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், சாய் பல்லவி கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள "அமரன்" திரைப்படம், இந்திய ராணுவத்தில் பல சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், முகுந்த் வரதராஜனின் மனைவி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வீடியோவை படக்குழு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ முகுந்த் வரதராஜன் மனைவியை அறிமுகம் செய்தவுடன் தொடங்கி, பின்னர் சாய் பல்லவி அவரது கதாபாத்திரத்தில் மாறி, ரொமான்ஸ் மற்றும் சில ஆச்சரியமான நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோவின் இறுதியில், "கடலுக்கும் ஆகாயத்துக்கும் இடையேயான தூரம் எனக்கும் அவளுக்கும்" என்ற வசனத்துடன் முடிவடைகிறது. இந்த வீடியோ ‘அமரன்’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment