கடலுக்கும் ஆகாசத்துக்கும் இடையில் உள்ள தூரம் எனக்கும் அவனுக்கும்: 'அமரன்' சாய் பல்லவி வீடியோ..!

  • IndiaGlitz, [Friday,September 27 2024]

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடித்த அமரன் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில், சாய் பல்லவி கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வீடியோ வெளியிடப்பட்டு, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் திரைப்படம், இந்திய ராணுவத்தில் பல சாதனைகளைப் புரிந்து, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த முகுந்த் வரதராஜனின் உண்மை கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில், முகுந்த் வரதராஜனின் மனைவி கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். அவருடைய கதாபாத்திரத்தை அறிமுகம் செய்யும் வீடியோவை படக்குழு சற்றுமுன் வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோ முகுந்த் வரதராஜன் மனைவியை அறிமுகம் செய்தவுடன் தொடங்கி, பின்னர் சாய் பல்லவி அவரது கதாபாத்திரத்தில் மாறி, ரொமான்ஸ் மற்றும் சில ஆச்சரியமான நிகழ்வுகளை வெளிப்படுத்துகிறது.

இந்த வீடியோவின் இறுதியில், கடலுக்கும் ஆகாயத்துக்கும் இடையேயான தூரம் எனக்கும் அவளுக்கும் என்ற வசனத்துடன் முடிவடைகிறது. இந்த வீடியோ ‘அமரன்’ படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

 

More News

பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட விபரீதம்.. இன்று ரிலீஸ் ஆன படத்தின் திரையரங்கில் தீ விபத்து..!

பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த "தேவாரா" திரைப்படம் இன்று வெளியான நிலையில், ரசிகர்களின் ஆர்வக்கோளாறில் பட்டாசு வெடித்ததில், தியேட்டர் முன் வைக்கப்பட்டிருந்

'எஸ்டிஆர் 48' படம் என்ன ஆச்சு? வெற்றி பட இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு..!

சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகயிருந்த 'எஸ்டிஆர் 48' படம் இன்னும் தொடங்காத நிலையில், சிம்பு வேறு ஒரு இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பதால் பரபரப்பு

மீண்டும் இயக்குனர் விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத்? ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனர் விஜய் இயக்கத்தில், ஏற்கனவே "தலைவி" என்ற திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்து இருந்த நிலையில், தற்போது மீண்டும் அவரின் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க

கார் ரேஸ்-க்கு தயாராகும் அஜித்.. சூப்பர் வீடியோ வைரல்..!

நடிகர் அஜித் மீண்டும் கார் ரேஸ் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாகவும், இது குறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்

பிரபல நடிகரின் படத்தில் வில்லன்களாக நடிக்கும்  நட்சத்திர ஜோடி.. யார் அவர்கள்?

பிரபல நடிகரின் படத்தில் பாலிவுட் திரையுலகின் நட்சத்திர ஜோடி வில்லன்களாக நடிக்க இருப்பதாக கூறப்படும் செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.