'அமரன்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த படத்தின் ஹீரோ யார்?
- IndiaGlitz, [Sunday,March 17 2024]
சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் இருக்கும் நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ யார் என்ற தகவலும் தற்போது தெரியவந்துள்ளது.
மறைந்த ராணுவ வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வரும் ’அமரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்தின் கிராபிக்ஸ் உட்பட ஒரு சில போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள தகவல்படி இந்த படம் விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தில் வெளியாக இருப்பதாகவும் அதற்காக பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.