'அமரன்' இயக்குனரின் அடுத்த படம்.. மாஸ் நடிகர் தான் ஹீரோ.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான "அமரன்" திரைப்படம் தீபாவளி திருநாளில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்தது. மேலும், இந்த படம் உலகம் முழுவதும் 150 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக கூறப்படும் நிலையில், இன்னும் திரையரங்குகளில் காட்சிகளாக ஓடி வருகிறது.
இந்த நிலையில், "அமரன்" என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் அடுத்த திரைப்பட அறிவிப்பு சற்றுமுன் அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. இன்று இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில், இந்த படத்தில் தனுஷ் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த படத்தை மதுரை அன்பு செல்வன் தனது கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
தனுஷ் தற்போது 'இட்லி கடை’ என்ற படத்தில் நடித்து, இயக்கி வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் ராஜ்குமார் பெரியசாமி படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
#D55ByGopuramFilms 🔥
— Gopuram Films (@gopuramfilms) November 8, 2024
Happy & excited to announce that #GopuramFilmsProductionNo7 is #D55 ❤️
Updates parakuthaa.. Next photo set dropping soon#GNAnbuchezhian @dhanushkraja @Rajkumar_KP @Sushmitaanbu #Vetrimaaran @Gopuramfilms @Gopuram_Cinemas @TeamaimPR @thetabsofficial… pic.twitter.com/RnlgtiZKPn
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments