close
Choose your channels

'அமரன்' , 'கங்குவா' ஓடிடி ரிலீஸ் எப்போது? ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

Sunday, November 24, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் மற்றும் சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் ஆகிய இரண்டு படங்களின் ஓடிடி ரிலீஸ் தகவல் கசிந்துள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ திரைப்படம் கடந்த தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் உலகம் முழுவதும் ₹300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் சில வாரங்களுக்கு முன்பே ஓடிடி வெளியீட்டுக்கு தயாராக இருந்தபோதும், திரையரங்குகளில் நல்ல கூட்டம் இருப்பதால், திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் ஓடிடி வெளியீட்டு தேதியை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்தன. தற்போதைய தகவலின்படி, ‘அமரன்’ திரைப்படம் நவம்பர் 29ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யா நடித்த ‘கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஆனால், ரசிகர்களின் நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக படத்தின் வசூல் குறைந்துவிட்டது. இதன் விளைவாக, தயாரிப்பு தரப்பு இந்த படத்தை விரைவில் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் இரண்டாவது வாரத்தில் ‘கங்குவா’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் எனவும், ஹிந்தி மொழியில் மட்டும் ஜனவரி மாதம் ஓடிடியில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

‘அமரன்’ மற்றும் ‘கங்குவா’ ஆகிய இரண்டு படங்களும் அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகவிருப்பதால், ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment