மடியில் குழந்தை.. கணவருடன் லிப்லாக்.. அமலாபால் ஓணம் கொண்டாட்ட புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,September 16 2024]

நடிகை அமலாபால் தனது மடியில் குழந்தையை வைத்திருக்க, கணவருக்கு லிப் லாக் முத்தம் கொடுக்கும் புகைப்படங்களுடன் ஓணம் பண்டிகை கொண்டாட்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் மலையாளம் தெலுங்கு உள்பட சில மொழிகளில் நடித்த அமலாபால் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன் குழந்தை பிறந்தது என்பது அந்த குழந்தைக்கு இலை என்ற பெயர் வைத்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் நேற்று கேரளாவில் ஓணம் பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் பல மலையாள நடிகைகள் தங்களுடைய சமூக வலைதளத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடிய புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்தனர்.

அந்த வகையில் நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓணம் கொண்டாடிய புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். எனது அருமை குழந்தை இலை மற்றும் கடவுள் எனக்கு ஆசீர்வதித்த எனது கணவருடன் ஓணம் பண்டிகையை அன்பாகவும் சிறப்பாகவும் கொண்டாடினேன் என்று அமலாபால் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த புகைப்பட தொகுப்பில் குழந்தையை மடியில் வைத்துக் கொண்டு கணவருடன் ரொமான்ஸ் செய்வது, லிப் லாக் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு 6 லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ், நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.