அமலாபால் நடித்த அடுத்த படத்தின் இயக்குனர் மற்றும் ரிலீஸ் தகவல்!

  • IndiaGlitz, [Sunday,June 27 2021]

தமிழ், தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகைகளில் ஒருவரான அமலாபால் நடித்துள்ள அடுத்த படத்தின் தகவல்களை அவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளா.ர்

அமலாபால் நடித்துள்ள அடுத்த படம் வெப்தொடராக உருவாகியுள்ளது. ’குடியெடமைதே’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த தெலுங்கு வெப்தொடர் ஓடிடியில் மிக விரைவில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்தொடரை இயக்குனர் பவன் குமார் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சமந்தா நடித்த ‘யூடர்ன்’ என்ற திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் ராகுல் விஜய் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெப்தொடர் குறித்து இயக்குனர் பவன்குமார் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நான் இயக்கிய தெலுங்கு வெப்தொடரான ’குடியெடமைதே’ விரைவில் வெளியாகவுள்ளது. ராம் விக்னேஷ் என்பவர் கதை எழுதியுள்ள இந்த வெப்தொடரில் அமலாபால், ராகுல் விஜய்யுடன் பணிபுரிந்ததில் எனக்கு மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார். அமலாபால் இந்த வெப்தொடரில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.