அமலாபால் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் கேரக்டர்!

  • IndiaGlitz, [Monday,February 25 2019]

நடிகை அமலாபால் தற்போது 'ஆடை', மற்றும் 'அதோ அந்த பறவை' ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் அவர் நடிக்கவுள்ள புதிய மலையாள திரைப்படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

அனுஷ் பிள்ளை என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ள 'கேடவர்' என்ற த்ரில் சஸ்பென்ஸ் படத்தில் அமலாபால் நடிக்கவுள்ளார். அபிலேஷ் பிள்ளை திரைக்கதை எழுதும் இந்த படத்தின் கதை கேரள போலீஸ் சர்ஜன் உமாநாதன் என்பவர் சமீபத்தில் கையாண்ட வழக்கு ஒன்றின் உண்மைக்கதையாகும். இந்த படத்தில் தமிழ்நாடு போலீஸ் தலைமை சர்ஜன் பத்ரா என்ற கேரக்டரில் அமலாபால் நடிக்கவுள்ளார்.

வரும் மார்ச் 25 முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.