அமலாபால் கொடுத்த பாலியல் புகார்! ஒருமணி நேரத்தில் கைது செய்த போலீஸ்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல நடிகை அமலாபால், இயக்குனர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற பின்னர் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் அவரிடம் தொழிலதிபர் ஒருவர் ஆபாசமாக பேசியதாக சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் நேற்று புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அமலாபால் புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், இதுகுறித்து துரிதமாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட தொழிலதிபரை ஒரு மணி நேரத்தில் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து அமலாபால் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'மலேசியாவில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக தற்போது நான் டான்ஸ் பயிற்சி செய்து வருகிறேன். பயிற்சி நடைபெறும் இடத்திற்கு நான் செல்வதை எப்படியோ தெரிந்து கொண்ட அந்த நபர் என்னிடம் மலேசிய நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்டவர் மாதிரி வந்து, ஆபாசமாக பேசினார். அதனால் நான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். எனக்கு நெருக்கமான ஒருவர்தான் அவரிடம் நான் டான்ஸ் பயிற்சிக்கு செல்லும் நேரத்தை கூறியிருக்க வேண்டும் என்றும் அந்த நபரையும் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காகவே நான் இந்த புகாரை அளித்துள்ளேன். காவல்துறையினர் எனது புகாரின் மீது துரிதமாக நடவடிக்கை எடுத்து வருவதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments