மொட்டை தலைக்கு முத்தம் கொடுத்த அமலாபால்: நிலவின் ஒளியில் காதல்!

  • IndiaGlitz, [Thursday,June 11 2020]

நடிகை அமலாபால் இந்த கொரோனா விடுமுறையில் தனது சமூக வலைப்பக்கத்தில் அவ்வப்போது வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் ஒரு சில நேரங்களில் அவர் கவிதை நயத்துடன் தத்துவ மழை பொழிவதும் உண்டு.

இந்த நிலையில் தற்போது அவர் தனது ஆண் நண்பர் ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஆண் நண்பரின் மொட்டைத்தலைக்கு அவர் முத்தம் கொடுப்பது போன்ற போஸ் உள்ளது. மேலும் தனது நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நடிகை அமலாபால் இன்னொரு பதிவில் அவர் நிலவின் ஒளியில் உட்கார்ந்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவர் கூறியதாவது: ‘நிலவின் ஒளியில் அவள் தன்னையே காதலிகின்றாள். நிலவின் ஒளியில் தான் ஒளிரும் போது தனக்கு தானே அன்பு செலுத்த தகுதியானவள் என்பதையும் உணர்கிறாள்’ என்று அமலாபால் குறிப்பிட்டுள்ளார். அமலாபாலின் இந்த கவிதைநயமான நிலவு குறித்த பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது.