பாலிவுட் செல்லும் மற்றொரு முன்னணி தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Sunday,July 22 2018]

பாலிவுட் திரையுலகில் இருந்து பல நடிகைகள் கோலிவுட் பக்கம் படையெடுத்து வந்து கொண்டிருக்கும் நிலையில் கோலிவுட்டின் பிரபல நடிகை ஒருவர் பாலிவுட் பட வாய்ப்பை பெற்றுள்ளார். அவர்தான் அமலாபால்.

'மைனா' படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த அமலாபால் அதன்பின்னர் பல வெற்றிப்படங்களில் தமிழில் நடித்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது பாலிவுட் இயக்குனர் நரேஷ் இயக்கத்தில் அமலாபால் ஒரு இந்தி படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அர்ஜூன் ரம்பால் ஹீரோவாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமலாபால் கூறியபோது, 'பாலிவுட்டில் இருந்து கடந்த சில வருடங்களாக பல வாய்ப்புகள் எனக்கு வந்தாலும் ஒரு சரியான கேரக்டருக்காக காத்திருந்தேன். இயக்குனர் நரேஷ், நான் நடித்த ஒருசில தமிழ்ப்படங்களில் எனது நடிப்பை பார்த்து அவரது அடுத்த படத்தின் கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கணித்துள்ளார். அவரை நேரில் சந்தித்து கதை மற்றும் எனது கேரக்டர் குறித்து கேட்டவுடன் திருப்தியான நான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்த படம் எனக்கு பாலிவுட்டில் ஒரு நல்ல அறிமுகமாக இருக்கும் என்று நம்புகிறேன். வரும் அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என்று அமலாபால் கூறியுள்ளார்.

More News

பார்த்திபன் இயக்கத்தில் மீண்டும் வெற்றி ஜோடி

பார்த்திபன் இயக்கிய 'கோடிட்ட இடங்களை நிரப்புக' திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் அவர் விரைவில் 'உள்ளே வெளியே 2' திரைப்படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

'பெரியார் குத்து'க்காக நடனம் ஆடிய சிம்பு

சிம்பு சிறந்த நடிகர் மட்டுமின்றி நல்ல பாடகர் மற்றும் இசையமைப்பாளர் என்பது அனைவரும் அறிந்ததே. திரைப்படங்களுக்கு இசையமைப்பது மட்டுமின்றி அவ்வப்போது தனிப்பாடல்களையும் வெளியிட்டு வருவது வழக்கம்.

'சர்கார்' படத்தின் அடுத்தகட்ட பணிக்கு செல்லும் தளபதி விஜய்

விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'சர்கார்' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. இந்த படத்தை தீபாவளி அன்று திரையில் திட்டமிட்டிருப்பதால் பணிகள் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.

பொன்னம்பலம்-மும்தாஜ் நேருக்கு நேர் மோதல்: என்ன செய்ய போகிறார் கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 30 நாட்களுக்கும் மேல் ஆகியும் இதன் ஸ்கிரிப்ட் ரைட்டர்களின் திறமையின்மையால் இன்னும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களால் ஒன்றிப்போக முடியவில்லை.

அனிருத்தின் இரண்டாவது படத்தில் நானி?

தமிழ் திரையுலகில் இளம் இசைப்புயல் அனிருத் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வரும் நிலையில் கடந்த ஆண்டு அவர் தெலுங்கு திரையுலகில் Agnyaathavaasi என்ற படத்திற்கு இசையமைத்தார்.