இந்திய சினிமாவில் முதல்முறையாக அமலாபால் படம்

  • IndiaGlitz, [Monday,December 31 2018]

ஃபாரன்சிக் சர்ஜன் என்று கூறப்படும் தடய அறுவை சிகிச்சை நிபுணர் கேரக்டரில் இதுவரை இந்திய சினிமாவில் யாரும் நடித்ததில்லை என்ற நிலையில் முதல்முறையாக நடிகை அமலாபால் இந்த வேடத்தை ஏற்று நடித்துள்ளார். ஃபாரன்சிக் சர்ஜன் குறித்த முதல் இந்திய திரைப்படமும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளாவை சேர்ந்த பிரபல தடய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் தான் காவல்துறை பணியில் இருந்தபோது சந்தித்த முக்கிய வழக்கு குறித்த உண்மைக்கதையில் இந்த படம் உருவாகி வருகிறது. அனுப் பணிக்கர் என்ற மலையாள இயக்குனர் இயக்கும் இந்த படத்திற்கு அபிலாஷ் பிள்ளை என்பவர் திரைக்கதை எழுதுகிறார்

சமீபத்தில் விஷ்ணுவுடன் அமலாபால் நடித்த சூப்பர் ஹிட் வெற்றிப்படமான 'ராட்சசன்' படத்தின் எடிட்டர் சான் லோகேஷ், கலை இயக்குனர் கோபி ஆனந்த் மற்றும் ஸ்டண்ட் இயக்குனர் விக்கி ஆகியோர்கள் இந்த படத்திலும் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

விஷாலை அடுத்து திருமணம் குறித்து வரலட்சுமியின் அறிவிப்பு

நடிகர் விஷால் ஆந்திர மாநில தொழிலதிபர் ஒருவரின் மகளான அனிஷாவை விரைவில் திருமணம் செய்யவிருப்பதாக இன்று காலை தகவல் வந்த நிலையில் நடிகை வரலட்சுமியும் தனது திருமணம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

ஓவியா ரசிகரளுக்கான புத்தாண்டு பீர்-பிரியாணி

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்த 'சிலுக்குவார்பட்டி சிங்கம்;' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடித்து வரும் 'காஞ்சனா 3', '90ml', 'களவாணி 2' ஆகிய படங்கள் 2019ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

'பேட்ட'- 'விஸ்வாசம்' டிரைலர்கள் ஒரு ஒப்பீடு

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' மற்றும் தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வரும் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்

'சூர்யா 37' டைட்டில் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அறிவிப்பு

நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கி வரும் 'சூர்யா 37' படத்தின் டைட்டிலை ரசிகர்களே முடிவு செய்யும் வகையில் சமீபத்தில் டுவிட்டரில் மூன்று டைட்டில்கள் அறிவிக்கப்பட்டது

அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியுடன் புதிய 'பேட்ட' போஸ்டர்

ரஜினிகாந்த் நடித்த 'பேட்ட' திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக வெளியாகவிருப்பது தெரிந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருப்பதாக கூறப்பட்டு அதற்கான முன்பதிவுகளும் ஆரம்பமானது