பிரச்சினைகளை ஊதித் தள்ளுவேன்: விஜய் திருமண அறிவிப்புக்குப்பின் அமலாபால் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
இயக்குனர் விஜய் பெற்றோர்களின் விருப்பத்திற்கு இணங்க டாக்டர் ஐஸ்வர்யாவை இம்மாதம் திருமணம் செய்யவுள்ளதாகவும் இதுகுறித்து விஜய் வெளியிட்ட அறிக்கை குறித்த செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் விஜய்யின் திருமண அறிவிப்புக்கு பின் அவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற நடிகை அமலாபால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட்டை பதிவு செய்துள்ளார். அதில், "நான் போராடுவேன். வாழ்வேன். பெரிய சிறிய தடைகள் வரட்டும். அதில் இருந்து மீண்டு வந்து ஜொலிப்பேன். உயரத்தில் நிற்பேன். பிரச்சினைகளை நசுக்கி ஊதித் தள்ளுவேன். எனது பலத்தை நான் நம்புகிறேன். சுதந்திரமும் மகிழ்ச்சியும் முக்கியம். தைரியம் இருந்தால் தோல்வி அடைய மாட்டீர்கள். இதுதான் நான். இது எனது ஆடையின் கதை” என்று தெரிவித்துள்ளார்.
அமலாபாலின் தன்னம்பிக்கை மற்றும் மனத்திடத்தை இந்த டுவீட் சுட்டிக்காட்டினாலும் விஜய்யின் திருமண அறிவிப்பு தினத்தில் இந்த டுவீட் வெளியாகியிருப்பது குறித்து கோலிவுட் திரையுலகில் இந்த டுவீட் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
I’ll fight
— Amala Paul ⭐️ (@Amala_ams) June 29, 2019
I’ll survive
let obstacles come,big or small
I’ll shine I’ll stand tall
crush them to bits&blow away the dust
my strength is the only thing i trust
for freedom&happiness combined i thrive
cos if u have will,then no one can fail
well this is just me,its my tale #Aadai pic.twitter.com/Z42Fvs8rUX
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments