close
Choose your channels

கபடி வீரருக்கு ஜோடியாகும் அமலாபால்

Sunday, March 20, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருமணத்திற்கு பின்னர் ஒருசில நல்ல கேரக்டர்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் நடிகை அமலாபால். பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 'பசங்க 2' மற்றும் தனுஷின் 'அம்மா கணக்கு' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள அமலாபால் தற்போது மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க ஒரு படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பிரபல மலையாள இயக்குனர் ஜான்னி அந்தோணி இயக்கவுள்ள Thoppil Joppan என்ற மலையாள படத்தில் மம்முட்டி கபடி வீரராக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால் நடிக்கவுள்ளார். முதலில் இந்த கேரக்டருக்கு ஆண்ட்ரியா பரிசீலிக்கப்பட்டதாகவும் பின்னர் அமலாபால் தேர்வு செய்யப்பட்டதாகவும் இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கும் என்றும் இந்த படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment