close
Choose your channels

அமலாபால் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் மற்றும் டைட்டில் அறிவிப்பு

Thursday, August 16, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அரவிந்தசாமியுடன் அமலாபால் நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் 'ராட்சஷன்' என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அமலாபால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற 'மேயாத மான்' படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் .தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர்தான் அமலாபால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். .உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலாபால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் .

பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட் , பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள் . ஆனால் இந்த படம் மேற்சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது . "ஆடை" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது . விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment