அமலாபால் நடிக்கும் அடுத்த பட இயக்குனர் மற்றும் டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Thursday,August 16 2018]

அரவிந்தசாமியுடன் அமலாபால் நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இந்த ஆண்டு வெளியான நிலையில் தற்போது அவர் 'ராட்சஷன்' என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அமலாபால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மற்றும் இயக்குனர் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

திரை விமர்சகர்களின் பாராட்டுக்களை பெற்ற 'மேயாத மான்' படத்தை இயக்கிய இயக்குனர் ரத்னகுமார் .தனது முதல் படத்திலேயே திறமை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்த இவர்தான் அமலாபால் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். .உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலாபால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம் .

பொதுவாகவே இது மாதிரியான கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட் , பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள் . ஆனால் இந்த படம் மேற்சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் என்று சொல்லப்படுகிறது . ஆடை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடை பெற்று வருகிறது . விரைவில் படத்தை பற்றிய முழு விபரம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்கும் அஜித்-விஜய் இயக்குனர்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை உருவாக்க கோலிவுட் திரையுலகில் பலர் முயற்சித்து வந்த நிலையில் தற்போது இயக்குனர் விஜய்,

கட்டணம் கட்டினால் ரஜினிக்கு பாடம் எடுக்க தயார்? அமைச்சர் ஜெயகுமார்

சமீபத்தில் நடந்த கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், 'அதிமுகவினர் எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்

மகத்தின் மோசடி விளையாட்டு: ஐஸ்வர்யா ஆவேசம் அடையாதது ஏன்?

பிக்பாஸ் தனது போட்டியாளர்களுக்கு கொடுக்கும் டாஸ்க்குகள் அனைத்துமே சிறுபிள்ளைத்தனமாகவும், முட்டாள்த்தனமாகவும் இருப்பதாக ஏற்கனவே விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

சென்னை மழை குறித்து வெதர்மேன் கூறும் தகவல்

சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் நல்ல மழை பெய்த நிலையில் இன்றும் சென்னையில் மழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளார்.

அஜித்தின் அறிவியல் குழுவுக்கு அப்துல்கலாம் விருது: தமிழக அரசு அறிவிப்பு

சமீபத்தில் தல அஜித்தின் ஆலோசனையில் தக் ஷா என்ற மாணவர்கள் குழு ஒன்று உருவாக்கியுள்ள ஆளில்லா விமானம் உலக சாதனை செய்தது என்பதும்,