'தனுஷின்' 'அம்மா கணக்கு' ரிலீஸ் தேதியில் மாற்றம்

  • IndiaGlitz, [Thursday,June 09 2016]

தனுஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள 'அம்மா கணக்கு' படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸ் ஆகியது. மேலும் இந்த படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஜூன் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ஒரு வாரம் தள்ளி அதாவது ஜூன் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரிலீஸ் தேதியுடன் கூடிய போஸ்டர் ஒன்றும் இன்று காலை முதல் சமூக இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது.
அமலாபால், சமுத்திரக்கனி, ரேவதி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை அஸ்வினி ஐயர் இயக்கியுள்ளார். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் அமலாபாலுக்கு மிகச்சிறந்த படமாக அமையும் என்றும் இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More News

விஜய் வில்லனுக்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்

விஜய் நடித்த துப்பாக்கி, ஜில்லா போன்ற படங்களில் நாயகியாக நடித்த காஜல் அகர்வால் தற்போது விஜய் நடித்த 'புலி' படத்தில் வில்லனாக நடித்த சுதீப்புக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கபாலி' டிராக் லிஸ்ட் இதோ

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'கபாலி' படத்தின் பாடல்கள் வரும் 12ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டிராக்லிஸ்ட் வெளியாகியுள்ளது.

சாதாரண பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம். இளையராஜா வேண்டுகோள்

பிரபல இசையமைப்பாளர் இளையராஜா நேற்று கர்நாடக மாநில கோவில்களில் தரிசனம் செய்துவிட்டு சென்னைக்கு திரும்ப பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரது உடமைகள்...

நடிகை விசாகா சிங்கிற்கு விரைவில் திருமணம்?

'கண்ணா லட்டு தின்ன ஆசையா', வாலிப ராஜா' உள்பட பல படங்களில் நடித்த நடிகை விசாகா சிங் நடிகையாக மட்டுமின்றி தொழிலதிபராகவும் விளங்கி வருகிறார்...

ரஜினி-விஜய் இசையமைப்பாளருடன் 3வது முறையாக இணையும் சித்தார்த்

பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டக்கத்தி' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான சந்தோஷ் நாராயணன் ஒருசில வருடங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்...