நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை: கைதான பிரபலம் இவரா?

  • IndiaGlitz, [Tuesday,August 30 2022]

பிரபல நடிகை அமலாபாலுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவரது நெருங்கிய நண்பர் ஒருவரே கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்தில் வெளியான ’காடவர்’ என்ற திரைப்படத்தை தயாரித்து அதில் முக்கிய வேடத்தில் அமலாபால் நடித்து இருந்தார் என்பதும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் நடிகை அமலா பால். இயக்குனர் விஜய்யை விவாகரத்து செய்த பின்னர் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர் சிங் தத் என்பவருடன் நெருக்கமாக இருந்ததாகவும் அவருடன் இணைந்து திரைப்படங்கள் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

விழுப்புரம் அருகே ஆரோவில் தங்கியிருந்த பவ்நிந்தர் சிங் தத் உடன் தொழில்முறையில் நெருக்கமாக அமலாபால் இருந்த நிலையில் திடீரென இருவரும் திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்கள் வைரலானது. ஆனால் பவ்நிந்தர் சிங் தத் தனது நண்பர் மட்டுமே என்றும் திருமணம் ஆகவில்லை என்றும் அமலாபால் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் பவ்நிந்தர் சிங் தத் தன்னுடன் எடுத்த புகைப்படத்தை தவறாக பயன்படுத்தி தனக்கு மிரட்டல் விடுத்து வருவதாகவும் பணம் மற்றும் சொத்துக்களை மோசடி செய்து மன ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் துன்புறுத்தல் செய்ததாகவும் அமலாபால் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவரது ஆண் நண்பர் பவ்நிந்தர் சிங் தத் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.