ஒன்றாக வளர்கிறோம்.. மகனின் க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, அதில் "ஒன்றாக வளர்கிறோம்" என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த நடிகை அமலாபால், கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் இந்த தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது என்பதும், அந்த குழந்தைக்கு "இலை" என்று பெயர் வைத்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.
அவ்வப்போது தனது மகனுடன் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலாபால் மற்றும் அவரது கணவர் தேசாய் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், சற்றுமுன் அமலாபால் தனது மகனுடன் இருக்கும் மற்றொரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், அதில் "ஒன்றாக வளர்கிறோம்" என்று கேப்ஷனாக குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments