அமலாபால் சர்ச்சை புகைப்படம்! அன்புமணி கண்டிப்பாரா?

  • IndiaGlitz, [Monday,December 17 2018]

நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவது தெரிந்ததே. சமீபத்தில் கூட வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு கையில் மது பாட்டிலுடன் ஒரு புகைப்படத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது அமலாபால், தான் புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில், 'நான் புகைப்பிடிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க மாட்டேன். ஹாலிவுட் ரசிகையின் கனவு ஒன்று நிறைவேறியுள்ளது. அனைத்து நட்சத்திரங்களுக்கும் புகைப்பிடிக்கும் புகைப்படம் ஒன்றாவது இருக்கும், இது என்னுடையது' என்று பதிவு செய்துள்ளார்.

விஜய் புகைபிடிக்கும் புகைப்படங்கள் வந்தால் உடனே கண்டனம் தெரிவிக்கும் பாமக அன்புமணி, இதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்டுக்கள் பதிவு செய்து வருகின்றனர்.