உலகளவில் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ.. அமலாபால் பங்கேற்பு.. வைரல் வீடியோ..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் இந்த நேரத்திலும் கூட போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வருகிறார் என்பதும் திரைப்பட புரமோஷன் பணிகளுக்கு கூட சென்று வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த பேஷன் ஷோவில் உலக அளவில் 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்ட நிலையில் இதில் சிறப்பு விருந்தினராக தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அமலாபால் கலந்து கொண்டார்.
நடிகை அமலாபால் இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு அவர் ரேம்ப் வாக் நடந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பெண்களின் மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அமலா பால் கலந்துகொண்டார். இந்த பேஷன் ஷோவில் 105 கர்ப்பிணிப் பெண்கள் இதில் கலந்து கொண்டனர். உலகளவில் அதிக கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ என்ற அங்கீகாரமும் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது.
Amala Paul ramp walk at Lulu Fashion Week 2024 🤍✨#AmalaPaul pic.twitter.com/3sAmZdEwTt
— WV - Media (@wvmediaa) May 14, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments