உலகளவில் கர்ப்பிணி பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ.. அமலாபால் பங்கேற்பு.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Tuesday,May 14 2024]

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவர் இந்த நேரத்திலும் கூட போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து வருகிறார் என்பதும் திரைப்பட புரமோஷன் பணிகளுக்கு கூட சென்று வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கர்ப்பிணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த பேஷன் ஷோவில் உலக அளவில் 100 க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கலந்து கொண்ட நிலையில் இதில் சிறப்பு விருந்தினராக தற்போது கர்ப்பிணியாக இருக்கும் அமலாபால் கலந்து கொண்டார்.

நடிகை அமலாபால் இந்த பேஷன் ஷோவில் கலந்து கொண்டு அவர் ரேம்ப் வாக் நடந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பெண்களின் மகப்பேறு காலத்தை மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில், கேரள மாநிலம் கொச்சியில் தனியார் மருத்துவமனை சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கான ஃபேஷன் ஷோ நடத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகை அமலா பால் கலந்துகொண்டார். இந்த பேஷன் ஷோவில் 105 கர்ப்பிணிப் பெண்கள் இதில் கலந்து கொண்டனர். உலகளவில் அதிக கர்ப்பிணிப் பெண்கள் கலந்து கொண்ட ஃபேஷன் ஷோ என்ற அங்கீகாரமும் இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்துள்ளது.

More News

கோலிவுட்டில் கால் பதிக்கும் அமெரிக்க நிறுவனம்.. அமெரிக்காவில் தயாரான  'தி வெர்டிக்ட்' தமிழ் திரைப்படம்

அக்னி எண்டர்டெயின்மெண்ட் (அமெரிக்கா) அதன் சென்னை துணை நிறுவனத்துடன் இணைந்து கோலிவுட்டில் தனது முதல் திரைப்படத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க அமெரிக்காவின்

நடிகர் கவுண்டமணி நில விவகார வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நடிகர் கவுண்டமணியின் நில விவகார வழக்கு கடந்த 28 ஆண்டுகளாக நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் முக்கிய உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் படத்தின் முக்கிய கேரக்டரில் தமிழ் நடிகை.. அஜித் ஜோடியாக நடித்தவர்..!

அஜித் உள்பட பல பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்தவர் தற்போது ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

நடிகை லேகா வாஷிங்டனை காதலிக்கும் அமீர்கானின் உறவினர்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ள நடிகர்கள் லேகா வாஷிங்டனை காதலிப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.

சென்னையில் கிராமிய மணம் கமழும் சுடலைமாட சுவாமி கோவில்: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் உருவாக்கிய அற்புதம்!

சென்னை: பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் அவர்களால் கட்டப்பட்ட "சுடலைமாட சுவாமி" கோவில், சென்னையில் கிராமிய மணம் கமழும் ஒரு ஆன்மீக தலமாக விளங்குகிறது.