2020 இல் நான் கற்றுக் கொணடவை… மனம் திறக்கும் முன்னணி நடிகை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை அமலாபால். இவர் முன்னதாக இயக்குநர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு பின் கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றார். அடுத்து மும்பையில் பாடகர் ஒருவரோடு உறவில் இருக்கிறார் என்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இந்த விவகாரம் குறித்து கடந்த மாதம் அவதூறு வழக்கு ஒன்றையும் நடிகை அமலாபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்தார்.
இந்நிலையில் தற்போது 2020 இல் தான் நிறைய பாடங்களை கற்றுக் கொண்டதாக தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து இருக்கிறார். அதில் “புதிதாக சில முடிவுகளையும் எடுத்து இருக்கிறேன். ஆன்மீக உணர்வு ஏற்பட்டு இருக்கிறது. தான் என்ற அகந்தை மறைந்து விட்டது. அந்த அகந்தையில் இருந்து விழித்து எழுந்து இருக்கிறேன். எனக்குள் இருக்கிற குண்டலினி சக்தியை எழுப்ப வாய்ப்பு கொடுத்தேன். எனது வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் கவுரவமாகவும் நன்றியோடும் ஏற்றுக்கொண்டேன்.
வருத்தம், வேதனை, கஷ்டம் போன்றவற்றில் இருந்து ஓடிப்போய்விட வேண்டும் என்று நினைத்தது இல்லை. அவற்றில் இருந்து நிறைய பாடம் கற்றுக் கொண்டேன். பழைய சினேகிதர்களை சந்திக்க செல்ல வேண்டும். விரோதிகளை மன்னிக்க வேண்டும். நம்மை அறிந்து கொள்ள வேண்டும். இவையெல்லாம் 2020 இல் நான் புதிதாக கற்றுக் கொண்ட பாடங்கள்” எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.
தமிழில் இவர் “அதோ அந்த பறவை போல” “கடாவர்“ போன்ற படங்களை முடித்து இருக்கிறார். இந்நிலையில் யூ டர்ன் படத்தின் மூலம் கன்னடத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பவன் குமார் இயக்கும் ஒரு வெப் சிரிஸின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அமலா பால் ஒப்பந்தமாகி இருக்கிறார். “குடி யெடமைதே“ எனும் பெயரில் எடுக்கப்பட்டு வரும் இந்த வெப் சீரிஸ் 8 பகுதிகளாக வரவிருக்கிறது. அதுதவிர இயக்குநர் நந்தினி ரெட்டி இயக்கும் ஆந்தாலஜி சீரிஸிலும் இவர் முதன்மை வேடத்தில் வரவிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2020 ~ The year that was! ✨????️☯️???? ??♀️?????? ?? #theyearthatwas #amalasyear #2020 #awalkdownmemorylane #yogini #kundalini #grateful #healing #selflove #exploreyourself #solojourney #transform #innerchild #greatvibesonly pic.twitter.com/m0tRwnQvqn
— Amala Paul ⭐️ (@Amala_ams) December 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout