நடிகை அமலாபாலின் புதிய  வைரல் வீடியோ

  • IndiaGlitz, [Thursday,May 03 2018]

தமிழ்,தெலுங்கு மற்றும் மலையாள  திரையுலகில் நடிகை அமலாபால்  பிசியாக நடித்து கொண்டிருக்கின்றார். அவரது நடிப்பில் உருவான 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது. மேலும் அவர் விஷ்ணுவுடன் ராட்சஷன் மற்றும் 'அதோ அந்த பறவை போல' உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த  நிலையில் அமலாபாலின் புதிய  வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. அமலாபால் நடிப்பதற்கு  நேரம் ஒதுக்கியது போக, கிடைக்கும் ஓய்வு நேரங்களில் யோகா பயின்று வந்தார் என்பது தெரிந்ததே. இதில் யோகாவின் முக்கிய அம்சமான சிரசாசனம் என்ற தலைகீழாக நிற்கும் யோகாசனத்தை அவர் உரிய பயிற்சியாளர் உதவியுடன் கடந்த சில  மாதங்களாக பயின்று வந்துள்ளார்.

கடின பயிற்சிக்கு பின்  தற்போது யாருடைய உதவியும் இல்லாமல் அவர் சிரசாசனம் செய்து வருகிறார். இந்த நிலையில் பொது இடத்தில் புல்தரையில் அமலாபால் சிரசாசனம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இந்த  வீடியோவில் அவர் யாருடைய உதவியும் இன்றி பக்காவாக சிரசாசனம் செய்வதை பார்த்து அனைவரும் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.

More News

நீட் தேர்வு: தமிழக மாணவர்களுக்கு வெளிமாநிலங்களில் தேர்வு மையம், சுப்ரீம் கோர்ட் உத்தரவு

இந்த ஆண்டு நீட்தேர்வு எழுதும் தமிழக  மாணவர்கள் பலருக்கு கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

எஸ்.வி.சேகர் கைது குறித்து சென்னை ஐகோர்ட் பிறப்பித்த அதிரடி உத்தரவு

பெண் பத்திரிகையாளர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது முகநூலில் பதிவு செய்த எஸ்.வி.சேகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர் எந்த நேரமும் கைது செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

நான்கு நாட்களில் இரண்டு முறை திருமணம் செய்த தமிழ் நடிகை

காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா ஆகிய தமிழ் படங்களிலும், ஒருசில கன்னட, மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகை மேக்னாராஜ்.

தேசிய விருதை புறக்கணித்த 'டூலெட்' இயக்குனர் செழியன்: காரணம் என்ன?

சமீபத்தில் தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்த ஆண்டு விருது அறிவிப்பில் தமிழக திரைப்பட துறை புறக்கணிக்கப்பட்டதாகவும்

விஜய்யிடம் இரண்டு கதைகள் கூறி காத்திருக்கும் பிரபல இயக்குனர்

'ராம்' மற்றும் 'பருத்திவீரன்' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் ராம், தற்போது தனுஷின் 'வடசென்னை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.