அமலாபாலுக்கு பிடித்த ஆண் உடை!
Send us your feedback to audioarticles@vaarta.com
'பாஸ்கர் தி ராஸ்கல்', 'ராட்சசன்' ஆகிய இரண்டு வெற்றிப்படங்களில் கடந்த ஆண்டு நடித்த நடிகை அமலாபால் தற்போது 'அதோ அந்த பறவை' மற்றும் 'ஆடை' என்ற இரண்டு தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ஆடை' படம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் மலையாள படம் ஒன்றிலும் அமலாபால் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அமலாபால் அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான புகைப்படங்களை பதிவு செய்வது வழக்கம். அந்த வகையில் ஆண்களின் உடைகளில் ஒன்றான லுங்கி மற்றும் டீசர்ட் அணிந்த புகைப்படங்களை அவர் தற்போது பதிவு செய்துள்ளார். வழக்கம்போல் இந்த புகைப்படங்களுக்கு நேர் மற்றும் எதிர்மறை கமெண்ட்டுக்கள் நெட்டிசன்களிடம் இருந்து பதிவாகி வருகிறது.
சனிக்கிழமை இரவை லுங்கி கட்டி ஜாலியாக பாட்டுப்பாடி டான்ஸ் ஆடி மகிழ்ந்ததாகவும், அனைவரும் இயற்கையை ரசித்து ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழ வேண்டும் என்றும் அமலாபால் கேட்டுக்கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout