close
Choose your channels

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நேரத்திலும் ஒரு போட்டோஷூட்.. அமலாபால் வைரல் வீடியோ..!

Sunday, April 28, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறந்து விடும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதிலும் அவர் போட்டோஷூட் ஒன்றில் கலந்து கொண்டிருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு லைக் குவிந்து வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும், இவர் அஜித் விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் கடந்த ஆண்டு நடிகை அமலாபால், தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் என்பதும் படிப்படியாக அவர் தனது கர்ப்பம் குறித்த புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறந்து விடும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் அவர் புதிய போட்டோஷூட் எடுத்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

இந்த வீடியோவில் அவர் அசத்தலான மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோஷூட்டுக்கு விதவிதமான போஸ் கொடுக்கும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment