இன்னும் சில நாட்களில் டெலிவரி.. அதற்கு முன் இந்த ஆட்டமா? அமலாபால் வைரல் வீடியோ..!
- IndiaGlitz, [Thursday,May 09 2024]
நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமலாபால் வயிற்றை கையால் பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
தமிழ் திரையுலகில் விஜய், அஜித் உள்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்த அமலாபால் ஒரு சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. சமீபத்தில் அவர் பிரித்விராஜ் உடன் நடித்த ’ஆடுஜீவிதம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமான அமலாபால் ஒவ்வொரு மாதமும் தன்னுடைய கர்ப்ப நிலையை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் ஒன்பதாவது மாதத்தில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் இது குறித்த வீடியோவையும் பதிவு செய்து அதில் நடனமாடும் காட்சியையும் பதிவு செய்துள்ளார்.
அந்த வீடியோவில் அமலாபால் ஒரு கையால் வயிற்றை பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் போஸ் கொடுத்து நடமாடியதை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தை பிறக்க இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவரது கணவர் அவரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பலர் அறிவுரை கூறி வருகின்றனர்.