இன்னும் சில நாட்களில் டெலிவரி.. அதற்கு முன் இந்த ஆட்டமா? அமலாபால் வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,May 09 2024]

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் அவருக்கு குழந்தை பிறந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அமலாபால் வயிற்றை கையால் பிடித்துக் கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் விஜய், அஜித் உள்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்த அமலாபால் ஒரு சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் நடித்துள்ளார் என்பதும் தெரிந்தது. சமீபத்தில் அவர் பிரித்விராஜ் உடன் நடித்த ’ஆடுஜீவிதம்’ என்ற படத்தில் நாயகியாக நடித்திருந்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமான அமலாபால் ஒவ்வொரு மாதமும் தன்னுடைய கர்ப்ப நிலையை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து பதிவு செய்து வரும் நிலையில் தற்போது அவர் ஒன்பதாவது மாதத்தில் அடி எடுத்து வைத்துள்ளார். இந்நிலையில் இது குறித்த வீடியோவையும் பதிவு செய்து அதில் நடனமாடும் காட்சியையும் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில் அமலாபால் ஒரு கையால் வயிற்றை பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் போஸ் கொடுத்து நடமாடியதை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். குழந்தை பிறக்க இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் அவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் அவரது கணவர் அவரை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பலர் அறிவுரை கூறி வருகின்றனர்.

More News

மாந்திரிகத்தின் மர்மங்களையும் ரகசியங்களையும் அம்பலப்படுத்தும் குருஜி முரளி மோகன் ஜி!

புகழ்பெற்ற ஜோதிடர் குருஜி முரளி மோகன் ஜி, ஆன்மீக க்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மாந்திரிகம் என்ற பண்டைய கலை பற்றிய அரிய தகவல்களை வெளிப்படுத்துகிறார்.

'குக் வித் கோமாளி' குக்குகளுக்கு இவ்வளவு சம்பளமா? அதிகபட்சம் வாங்குவது இவரா?

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் சமீபத்தில் தொடங்கிய நிலையில் ஆரம்பமே அட்டகாசமாக இருப்பதாகவும் வெங்கடேஷ் பட் இல்லாதது ஒரு சிறு குறையாக

நெருங்கிய நண்பர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்.. மீண்டும் ரஜினி மக்கள் மன்றமா?

நடிகர் ரஜினிகாந்த் திடீரென தனது நெருங்கிய நண்பர் வீட்டிற்கு விசிட் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'அடங்காத அசுரனுக்கு நான் கியாரண்டி.. 'ராயன்' சூப்பர் அப்டேட் தந்த எஸ்.ஜே.சூர்யா..!

தனுஷ் நடித்த 'ராயன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஜூன் மாதம் வெளியாகும் என்றும், மே 9ஆம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட்

கல்யாணம் செய்தால் யாருக்கு நன்மை? என்ன இப்படி சொல்லிட்டாங்க வரலட்சுமி.. வைரல் வீடியோ..!

நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு கடந்த மார்ச் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் கல்யாணம் செய்தால் யாருக்கு நன்மை என்று ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம்