நிறை மாத கர்ப்பிணியிடம் இப்படியா நடந்து கொள்வது? சகிக்க முடியாமல் காதை பொத்தி கொண்ட அமலாபால்..!

  • IndiaGlitz, [Wednesday,April 24 2024]

நடிகை அமலாபால் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில் அவருக்கு கூடிய விரைவில் குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கணவரின் பாட்டு தொல்லை தாங்காமல் அவர் காதை பொத்துக் கொள்ளும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் திரையுலகில் கடந்த 2000 ஆண்டுகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் அமலாபால் என்பதும் விஜய் , அஜித் உட்பட பல பிரபலங்கள் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது தெரிந்தது. மேலும் தமிழ் மட்டும் இன்றி மலையாளத்தில் அவர் பல படங்கள் நடித்துள்ளார் என்பதும் ஒரு சில படங்களில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பிரித்திவிராஜ் உடன் அமலாபால் நடித்த ’ஆடு ஜீவிதம்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூலில் சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் என்பதும் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கர்ப்பமான புகைப்படங்கள் வீடியோக்களை பதிவு செய்தார் என்பதையும் பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலா பாலுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது.

இந்த நிலையில் அமலாபால் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வீடியோவை வெளியிட்ட நிலையில் அவரது காதருகே அவரது கணவர் தேசாய் பாடும் காட்சியும் கணவரின் பாடலை சகிக்க முடியாமல் அமலாபால் கை விரலால் காதை பொத்திக் கொள்ளும் காட்சியும் உள்ளது. இதற்கு நிறை மாத கர்ப்பிணியிடம் இப்படியா நடந்து கொள்வது? என்பது உட்பட ஏராளமான காமெடியான கமெண்ட்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

ரஜினி, லோகேஷ் கனகராஜ் சம்பளமே 300 கோடிக்கும் மேல்? 'கூலி' படத்தின் பட்ஜெட் எவ்வளவு?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'கூலி' படத்தின் டைட்டில் வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும், இந்த வீடியோ

நடிகையின் காதலை படமாக்கும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.. 12 ஆண்டுகளுக்கு பின் ரீஎண்ட்ரி

கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல பிரபலங்களின் படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தில் சினிமா நடிகையின் காதல் தான் கதை

அஜித்துக்காக ஏ.ஆர்.முருகதாஸ் 10 ஆண்டுகளாக வைத்திருந்த டைட்டில்.. நன்றி கூறிய பிரபல நடிகர்..!

அஜித்துக்காக ஏஆர் முருகதாஸ் கடந்த 10 ஆண்டுகளாக வைத்திருந்த டைட்டிலை தற்போது பிரபல நடிகரின் அடுத்த படத்திற்கு தந்துள்ள நிலையில் அந்த நடிகர் நன்றி தெரிவித்துள்ளார்.

அட்லி, அல்லு அர்ஜுன் இருவருக்கும் சம்பளம் கொடுக்காமல் படம் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ்.. பரபரப்பு தகவல்..!

நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குனர் அட்லி ஆகிய இருவரும் மிகப்பெரிய சம்பளம் வாங்கும் நிலையில் இருவருக்கும் சம்பளம் கொடுக்காமல் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு திரைப்படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக

நான் செத்தால் வரும் இன்சூரன்ஸ் பணத்தில் என் 4 குழந்தைகள் நன்றாக இருப்பார்கள்: நடிகரின் அதிர்ச்சி பேட்டி..!

நான் தற்கொலை செய்து அல்லது வேறு வகையில் செத்துவிட்டால் என்னுடைய நான்கு குழந்தைகள் என் மரணத்தினால் கிடைக்கும் இன்சூரன்ஸ் பணத்தில் நன்றாக இருப்பார்கள்