மறுபடியும் மார்க்கெட்டை பிடிக்காமல் விட மாட்டாங்க போல.. அமலாபாலின் லேட்டஸ்ட் போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Monday,July 24 2023]

நடிகை அமலாபால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தார் என்பதும், அஜித் விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார் என்பதும் தெரிந்ததே.

ஆனால் அவருக்கு தற்போது பெரிய அளவில் மார்க்கெட் இல்லாத நிலையில் மீண்டும் இன்ஸ்டாகிராமில் களம் இறங்கி கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் சற்று முன் அவர் பதிவு செய்துள்ள கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்துள்ளது.

‘நான் இயல்பிலேயே போர் வீரன், என்னுடைய இதயத்தில் கடவுள் இருக்கிறார், நான் பெண் சக்தியின் உருவமாக இருக்கிறேன் என்று அமலாபால் இந்த புகைப்படங்களுக்கு கேப்ஷன் ஆக பதிவு செய்து உள்ளார்.

இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் வழக்கம்போல் சுவராசியமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். நைஸ் பொசிஷன் என்றும், மறுபடியும் மார்க்கெட்டை பிடிக்காமல் விடமாட்டார் போல போன்ற கமெண்ட்ஸ்களும் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில் அமலாபால் நடித்து முடித்துள்ள ’ஆடு ஜீவிதம்’ என்ற மலையாள படம் ’அதோ அந்த பறவை போல’ என்ற தமிழ் படமும் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.