close
Choose your channels

விஷ்ணு படத்தின் ஹீரோயின் ஆகிறாரா அமலாபால்?

Friday, September 18, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'மைனா' நடிகை அமலாபால், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதல் திருமணம் செய்த பின்னரும் திரையுலகில் இருந்து விலகாமல் சூர்யாவுடன் நடித்த 'பசங்க 2' படத்தில் நடித்தார். இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. மேலும் அவர் பிரபல மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கும் படம் ஒன்றையும் தயாரித்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என்ற செய்தி தற்போது கிடைத்துள்ளது.

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணுமஞ்சு நடிக்கவுள்ள அடுத்த படத்தில் நடிக்க படக்குழுவினர் அமலாபாலுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த படத்திற்காக அமலாபாலிடம் 15 நாட்கள் மட்டும் கால்ஷீட் கேட்டுள்ளதாகவும், இதுகுறித்த ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படத்தை சாய் கார்த்திக் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கபடுகிறது.

அமலாபால் கேரக்டர் சிறப்பு தோற்ற கேரக்டர் இல்லை என்றும், முக்கிய வேடத்தில்தான் அவர் நடிக்கவுள்ளார் என்று கூறும் படக்குழுவினர் மற்றொரு முன்னணி நடிகையும் இந்த படத்தில் நாயகியாக நடிக்கவுள்ளதாக கூறியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment