லாக்டவுன் நேரத்தில் அமலாபால் பொழிந்த தத்துவம்: இணையத்தில் வைரல்
- IndiaGlitz, [Saturday,May 23 2020]
இந்த லாக்டவுன் நேரத்தில் படப்பிடிப்பில் இல்லாமல் வீட்டில் இருக்கும் பல நடிகர் நடிகைகள் தங்களது சமூக வலைதள பக்கங்களில் வேடிக்கையான, வினோதமான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகை அமலாபால் கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் தத்துவம் மழையை பொழிந்து வருகிறார். அந்த வகையில் தற்போதும் அவர் லாக்டவுன் நேரத்தில் தேவையான ஒரு கருத்தை கூறியுள்ளார்
வாழ்க்கை என்றாலே பந்தயம் என்று நினைத்து பார்க்கும் மனோபாவத்திலிருந்து அனைவரும் மாறவேண்டும். பிரஷர் குக்கர் வாழ்க்கையில் இருந்து வெளியே வாருங்கள். இந்த லாக்டவுன் நேரத்தில் புதிதாக புத்தகம் படிக்க வில்லை என்றோ அல்லது புதிதாக ஏதாவது கற்று கொள்ளவில்லை என்றோ கவலை பட வேண்டாம். இது கற்று கொள்வதற்கும், உற்பத்தியை பெருக்குவதற்குமான நேரம் இல்லை. ரிலாக்ஸ் செய்யுங்கள். ஒருவர் செய்வதையே நாமும் செய்ய வேண்டும் என்று அவர்கள் பின்னாலேயே ஓட வேண்டாம்’ என்று ஒரு கருத்தை கூறியுள்ளார்
மிக ஆழமான வாழ்க்கையை ரசித்து ரிலாக்ஸ் செய்ய வேண்டிய ஒரு கருத்தை மிகவும் எளிதாக கூறிய அமலாபாலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
அமலாபால் நடித்த ‘அதோ அந்த பறவை போல்’ திரைப்படம் ரிலிசுக்கு தயாராக உள்ளது என்பதும் லாக்டவுன் முடிந்து திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படம் வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
View this post on InstagramRemember. ?? #Repost @chathan__ • • • • • • ?? #lockdownnotaratrace #stayinsane
A post shared by Amala Paul ✨ (@amalapaul) on May 23, 2020 at 2:36am PDT