மரணத்தில் அமைதியை தேடுபவர்கள் வாழ்வில் நிம்மதியை தேடாதது ஏன்? அமலாபால்

  • IndiaGlitz, [Monday,June 15 2020]

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் நேற்று திடீரென தற்கொலை செய்துகொண்டது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக திரை உலகை சேர்ந்தவர்களும் கிரிக்கெட் உலகை சேர்ந்தவர்களுக்கும் அதிர்ச்சியின் உச்சத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

சுஷாந்த்சிங் மறைவு குறித்து ஏராளமான பிரபலங்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்

ஒரு சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க வருடங்களை இழந்துவிட்டு இறப்பில் அமைதியை தேடுகின்றனர். ஆனால் ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? இந்த உலகம் உங்களுக்காக நிறைய செய்வதற்காக காத்திருக்கிறது என்று கூறியுள்ளார்

அமலாபாலின் இந்த பதிவில் சுஷாந்த்சிங் பெயர் இல்லை என்றாலும் சுஷாந்த்சிங் மரணமடைந்த ஒரு சில மணி நேரத்தில் அவர் இந்த பதிவை பதிவு செய்துள்ளதால் சுஷாந்த்சிங் தற்கொலை குறித்து தனது எண்ணத்தை அவர் தெரிவித்துள்ளதாகவே கருதப்படுகிறது. அமலாபாலின் இந்த பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர்.