ஓஷோவை எனக்கு அறிமுகம் செய்தவர்: மறைந்த இயக்குனர் சச்சி குறித்து பிரபல தமிழ் நடிகை

  • IndiaGlitz, [Saturday,June 20 2020]

மலையாள திரையுலகில் ’அய்யப்பனும் கோஷியும்’ என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய சச்சிதானந்தம் என்ற சச்சி சமீபத்தில் திடீரென மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தது மலையாள திரையுலகை மட்டுமின்றி இந்திய திரை உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது

47 வயதில் மாரடைப்பால் மரணமடைந்த சச்சிதானந்தின் மரணத்தை நம்ப முடியவில்லை என மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தமிழ் மற்றும் மலையாள திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மறைந்த இயக்குநர் சச்சி குறித்த தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்

தனக்கு மலையாள திரையுலகில் ’ரன் பேபி ரன்’ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தவர் சச்சிதானந்தம் என்றும் அந்த படத்தில் தனது கேரக்டர் ஆன ரேணுகா இன்னும் பலரது இதயத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் தனக்கு ஓஷோவை அறிமுகப்படுத்தியது சச்சிதான் என்றும், அவரது நட்புக்கு பின்னர்தான் தனக்கு வாழ்க்கையில் பல வெற்றி கிடைத்ததாகவும் அமலாபால் அவர் கூறியுள்ளார். சச்சி இந்த உலகத்தை விட்டு வேறு உலகத்திற்கு சென்றுவிட்டார் என்றும் அவருக்கு ‘குட் பை’ என்றும் அமலாபால் பதிவு செய்துள்ள இன்ஸ்டாகிராம் பதிவு தற்போது வைரலாகி வருகிறது