ஈஷா யோகா மையத்தில் கணவருடன் அமலாபால்.. மொத்தமா மாறிட்டாரே.. வைரல் வீடியோ..!

  • IndiaGlitz, [Saturday,March 09 2024]

நேற்று சிவராத்திரி கொண்டாட்டத்தின் போது நடிகை அமலா பால் தனது கணவருடன் ஈஷா யோகா மையத்தில் சிவபெருமானை மனமுருகி வழிபட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களே ஆகும் நிலையில் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் அவர் கர்ப்பமானதாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து கர்ப்பம் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அவ்வப்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வரும் நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அவர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்று வழிபட்ட புகைப்படங்களையும் பதிவு செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி திருவிழா விசேஷமாக கொண்டாடப்பட்ட நிலையில், நேற்று நடந்த சிறப்பு பூஜையில், பூஜா ஹெக்டே, சந்தானம், தமன்னா உள்பட பலர் சிறப்பு பிரார்த்தனையில் கலந்து கொண்ட புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் நடிகை அமலா பால் ஈஷா யோகா மையத்திற்கு கணவருடன் சென்று சிவபெருமானை மனமுருகி வழிபட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.