'ஆடை' டீசரில் அமலாபாலின் தைரியம்: அதிர்ச்சி காட்சிகள்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விரைவில் வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
மகளை காணவில்லை என்று போலீஸில் புகார் கொடுக்கும் அம்மாவின் காட்சியோடு ஆரம்பிக்கும் இந்த டீசர், ஆடையில்லாமல் அமலாபால் உட்கார்ந்திருக்கும் அதிர்ச்சி காட்சிகளுடன் முடிவடைகிறது. இப்படி ஒரு காட்சியில் நடிக்க ஒரு முன்னணி நடிகைக்கு எப்படி தைரியம் வந்தது என்றே தெரியவில்லை.
டீசருக்கு முன் 'Freedom is what you do with what's been done to you.' என்ற வாசகங்களுடன் தோன்றுவதால் இதற்கும் இந்த படத்திற்கும் அதிக தொடர்பு இருக்கும் என கருதப்படுகிறது. அமலாபாலின் தைரியமான நடிப்பு, ரத்னகுமாரின் வித்தியாசமான கான்செப்ட், பிரதீப்குமாரின் பின்னணி இசை ஆகியவற்றை பார்க்கும்போது ஒரு த்ரில் படத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என தெரிகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com