close
Choose your channels

அமலாபால் நடித்த அடுத்த படத்திற்கு 'ஏ' சான்றிதழ்!

Saturday, June 1, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகை அமலாபால் கடந்த ஆண்டு நடித்த 'ராட்சசன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில் தற்போது அவர் 'அதோ அந்த பறவை போல', 'ஆடை', மற்றும் மூன்று மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அமலாபால் நடித்த 'ஆடை' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் சமீபத்தில் முடிவடைந்து ரிலீசுக்கு தயாரானது. இந்த நிலையில் இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்திற்கு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிந்துவிட்டதை அடுத்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

அமலாபால் முக்கிய வேடத்தில் நடித்த த்ரில் திரைப்படமான 'ஆடை' திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கியுள்ளார். பிரதீப்குமார் இசையில் விஜய் கார்த்திக்கண்ணா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை 'வீ ஸ்டுடியோஸ்' நிறுவனம் தயாரித்துள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment