'ஓ பேபி' இயக்குனரின் அடுத்த படத்தில் அமலாபால்!

  • IndiaGlitz, [Tuesday,October 08 2019]

சமீபத்தில் வெளிவந்த சமந்தாவின் ‘ஓபேபி’ திரைப்படம் தமிழ், மற்றும் தெலுங்கு மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்றது. 70 வயது கிழவியான லட்சுமி, 20 வயது சமந்தாவாக மாறிய பின்னர் நடக்கும் வித்தியாசமான சம்பவங்கள் இந்த படத்தை அனைவரையும் ரசிக்க வைத்தது

இந்த நிலையில் ‘ஓ பேபி’ இயக்குனர் நந்தினி ரெட்டி தற்போது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். ‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ என்ற பெயரில் உருவாகும் இந்த படத்தில் நான்கு கதைகள் உள்ளன. நான்கையும் நான்கு இயக்குனர்கள் இயக்கவுள்ளனர். இதில் ஒரு கதையைத்தான் ‘ஓபேபி’ இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கவுள்ளார். இதில் அமலாபால் மற்றும் ஜெகபதிபாபு முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். மேலும் மற்ற மூன்று கதைகளை தருண்பாஸ்கர், சந்தீப் வங்கா மற்றும் சங்கால்ப் ரெட்டி ஆகியோர் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

கடந்த ஆண்டு அனுராக் காஷ்யப் இயக்கத்தில் பாலிவுட்டில் வெளிவந்த ‘லஸ்ட் ஸ்டோரீஸ்’ என்ற படத்தின் தெலுங்கு ரீமேக் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது