அமலாபால் எடுத்த அடுத்த அவதாரம்

  • IndiaGlitz, [Monday,January 02 2017]

கோலிவுட் திரையுலகில் இளளயதளபதி விஜய், தனுஷ், சிம்பு, உள்பட பல நடிகர்களும், லட்சுமி மேனன், ரம்யா நம்பீசன், மடோனா செபாஸ்டியன் போன்ற நடிகைகளும் பாடல்கள் பாடி வரும் நிலையில் இந்த பட்டியலில் தற்போது அமலாபால் இணைந்துள்ளார்.

ஜெயராம், பிரகாஷ் ராஜ் நடித்து வரும் 'அச்சான்யன்ஸ்' என்னும் மலையாள திரைப்படத்தில் அமலாபால் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி இந்த படத்தில் அவர் ஒரு பாடலை பாடவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

அமலாபால் பாடும் பாடல் டியூன் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த பாடல் ஒலிப்பதிவு செய்யப்படவுள்ளதாகவும், இதற்காக அமலாபால் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் அமலாபால் தற்போது தனுஷுடன் 'வடசென்னை', 'வேலையில்லா பட்டதாரி 2', பாபிசிம்ஹாவுடன் 'திருட்டுப்பயலே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பிரபல ரேடியோ ஜாக்கியை திருமணம் செய்கிறார் ரமேஷ் திலக்

ரேடியா ஜாக்கியாக இருந்து தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகரான ரமேஷ் திலக் சூதுகவ்வும்...

தென்னிந்திய திரையுலகில் சாதனை படைத்தது 'பைரவா'

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' படத்தின் டிரைலர் புத்தாண்டு பிறப்பதற்கு ஒருசில மணி நேரங்களுக்கு முன் ரிலீஸ்...

ஜனவரி 6-ல் நயன்தாரா-விக்னேஷ் சிவன் குறித்த முக்கிய அறிவிப்பு

பிரபல நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்களாக இருந்து வருவதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒலிம்பிக் சாதனையாளரின் படம்

புகழ்பெற்ற இந்திய விளையாட்டு வீரர்கள், மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு படங்கள் அவ்வப்போது பாலிவுட்டில் வெளிவந்து வெற்றி பெற்று வருவதை பார்த்து வருகிறோம்...

சசிகலாவுடன் சிவாஜி குடும்பத்தினர் சந்திப்பு

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அவர் வகித்து வந்த சக்தி வாய்ந்த பதவியான...