கல்லூரி விழாவில் கலந்து கொண்டபோது ஆபாச உடையா?  பதிலடி கொடுத்த அமலாபால்..!

  • IndiaGlitz, [Saturday,July 27 2024]

நடிகை அமலாபால் சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது குட்டையான ஆபாச உடை அணிந்ததாக நெட்டிசன்கள் குற்றச்சாட்டு கூறிய நிலையில் அதற்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மலையாள திரையுலகில் நடிகையாக இருந்து வரும் அமலாபால் நடித்த ’லெவல் கிராஸ்’ என்ற படம் நேற்று வெளியாகி பாசிட்டிவ் ரிசல்ட் பெற்றுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் விழாவில் அவர் தனது குறித்த நெட்டிசன்களின் கருத்துகளுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் நடிகை அமலாபால் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட போது குட்டையான உடை அணிந்து இருந்ததாக நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்தனர். கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் ஒரு விழாவில் இப்படியா உடை அணிந்து வருவது? என்பது போன்ற விமர்சனங்கள் எழுந்த நிலையில் இதற்கு நடிகை அமலா பால் ’லெவல் கிராஸ்’ புரோமோஷன் விழாவின் போது பதிலடி கொடுத்துள்ளார்.

’என்னுடைய உடையில் எந்த ஆபாசமும் இல்லை, ஆபாசம் உங்கள் கண்களில் தான் இருக்கிறது, நீங்கள் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது, என்று கூறிய அவர் அந்த கல்லூரியில் நான் கலந்து கொண்ட போது நான் அணிந்த உடை மாணவர்களுக்கு எந்தவித அசெளகரித்தையும் ஏற்படுத்தவில்லை என்று உணர்ந்ததாகவும் கூறியுள்ளார். அமலாபாலின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன.