தனுஷ்-அமலாபால் படப்பிடிப்பு முடிந்தது
Send us your feedback to audioarticles@vaarta.com
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் கலக்கி வரும் தனுஷ் நடிகராக மட்டுமின்றி தரமான படங்களை தயாரித்தும் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் தயாரித்த 'காக்கா முட்டை' மற்றும் 'விசாரணை' படங்களே இதற்கு சாட்சி
இந்நிலையில் இந்த வரிசையில் தனுஷ் தயாரித்து வரும் இன்னொரு படம் 'அம்மா கணக்கு'. சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ரேவதி, அமலாபால் மற்றும் பலர் நடிக்கின்றனர். இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
Nile Battey Sannatta என்ற பாலிவுட் படத்தின் ரீமேக் படமான இந்த படம் அம்மா -மகள் உறவை உணர்ச்சிகரமாக விளக்கும் படம். இந்தியில் இந்த படத்தை இயக்கிய அஸ்வின் ஐயர், தமிழ் ரீமேக் படமான 'அம்மா கணக்கு' படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு வரும் ஏப்ரலில் இந்த படம் வெளியாகும் என்றும் தனுஷ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments