நான் மட்டுமல்ல, என் கணவரும் கர்ப்பமாக உள்ளார். அமலாபால் பதிவு செய்த அதிர்ச்சி புகைப்படம்..!

  • IndiaGlitz, [Sunday,January 14 2024]

நடிகை அமலாபால் சமீபத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்த நிலையில் தற்போது தனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் என நகைச்சுவையுடன் பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனது நீண்ட நாள் நண்பர் தேசாய் என்பவரை நடிகை அமலா பால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அவர் தற்போது கர்ப்பமாக இருப்பதாக அறிவித்திருந்தார்

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’ஒரு மனைவி கர்ப்பமாக இருக்கும் போது அவருடைய கணவரின் வயிறும் அதிகமாக வளரும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன என்றும் நான் மட்டுமல்ல எனது கணவரும் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் கூறி தனது கணவரின் தொப்பையை புகைப்படமாக எடுத்து பதிவு செய்துள்ளார். இந்த காமெடி பதிவை ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்

மேலும் ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது, ஒரு ஆணும் மனதளவில் அந்த குழந்தையை தனது நெஞ்சில் சுமக்கிறார் என்பதையும் அவர் மறைமுகமாக தெரிவித்துள்ளார். அமலாபாலின் இந்த பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.