காதலர் தினத்தில் ஒரு ஆன்மீக அனுபவம்.. அமலாபால் பகிர்ந்த புகைப்படம் வைரல்..!

  • IndiaGlitz, [Thursday,February 15 2024]

நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்களும் காதலர் தின கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் இந்த காதலர் தினத்தை வித்தியாசமாக ஆன்மீக வழியில் கொண்டாடியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலர் தினமான நேற்று நடிகை அமலாபால் கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு தனது கணவருடன் சென்ற புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். ஈஷா தியான மையத்தில் கணவரின் மடியில் படுத்து கொண்டு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்த புகைப்படத்தை அமலாபால் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் ’காதலர் தினத்தன்று ஜகத் அவர்களின் இருப்பிடத்தில் நானும் எனது கணவரும் ஆழ்ந்த தியானம் மேற்கொண்டோம். ஈஷா மீதான ஆழ்ந்த அன்பை கொண்டாடினோம். அன்பு என்பது கொடுப்பது, பெறுவது, கவனிப்பது, பகிர்வது ஆகியவற்றை குறிக்கிறது. அன்பு என்பது மனம், உடல் மற்றும் ஆவியை சந்தோஷப்படுத்துகிறது. இது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார் அமலாபாலின் இந்த பதிவும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

More News

மீண்டும் தீவிர அரசியலில் நடிகை கெளதமி .. முக்கிய கட்சியில் இணைந்ததால் பரபரப்பு..!

நடிகை கெளதமி கடந்த மாதம் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் திடீரென இன்று அவர் தமிழகத்தின் முன்னணி கட்சியில் இணைந்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

சைதை துரைசாமியை நேரில் சந்தித்த ரஜினிகாந்த்.. மகன் மறைவுக்கு ஆறுதல்..!

முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமியின் மகன் சமீபத்தில் மறைந்த நிலையில் அவருக்கு ரஜினிகாந்த் நேரில் சென்று ஆறுதல் வழங்கி உள்ளார்

ஏ.ஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தின் இசையமைப்பாளர் இவர்தான்: பூஜை புகைப்படம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 23 வது திரைப்படத்தை இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கவுள்ளார் என்பதும் இந்த படத்தின் பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு இன்று தொடங்க

ஒரே நாளில் ரீ ரிலிஸ் ஆகும் அஜித் மற்றும் அஜித்தின் மனைவி படங்கள்.. ரசிகர்களுக்கு டபுள் விருந்து..!

அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆனால் இரு தரப்பு ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் விருப்பத்துக்குரிய நடிகரின் படத்தை வெற்றி பெற வேண்டும்

கானா பாடகரின் குழந்தைக்குப் பெயர் வைத்த, சூப்பர் சிங்கர் சீனியர் நீதிபதிகள் !  சீசன் 10 ல் உருக வைத்த சம்பவம் !!

கொண்ட்டாடமும் கோலாகலமாக தொடங்கி நடந்து வரும் சூப்பர் சிங்கர் சீனியர் 10 வது சீசன் நிகழ்ச்சியில், கடந்த வாரம் பார்க்கும் அனைவரையும் நெகிழ வைக்கும்படியான அற்புதமான