நயன்தாரா பட வில்லனுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அமலாபால்!
Send us your feedback to audioarticles@vaarta.com
லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்த படம் ஒன்றில் வில்லனாக நடித்த நடிகருக்கு நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
பிரபல பாலிவுட் நடிகரும் இயக்குனரும் நடிகை நயன்தாரா நடித்த ’இமைக்கா நொடிகள்’ படத்தில் வில்லனாக நடித்தவருமான அனுராக் காஷ்யப் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை அடுத்து பாலிவுட் மற்றும் இந்திய திரை உலகினர் அவருக்கு தொடர்ச்சியாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்
இந்த நிலையில் நடிகை அமலாபால் தனது சமூக வலைத்தளத்தில் நடிகரும் இயக்குனருமான அனுராக் காஷ்யப் அவர்களுக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியதாவது:
மனிதர்கள் அனைவருமே சில குறைபாடுடையவர்கள் தான். யாரும் சரியானவர்கள் அல்ல, ஆனால் எந்த குறைபாடும் இல்லாத மிகச் சிறந்த அபூர்வமான மனிதரான அனுராக் காஷ்யப் அவர்களின் ஆசீர்வாதங்கள் எனக்கு கிடைத்தது. அவருக்கு எனது மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் உருவாக்கும் கலையைப் போலவே நீங்களும் மிகவும் உண்மையானவர். உங்களுக்கு நிறைய மகிழ்ச்சி, அன்பு, அமைதி கிடைக்க வாழ்த்துக்கள்
Human beings are flawed and nobody is perfect but HBD to the most perfectly imperfect human I have had the blessings to know. You are so raw and real like the art you create sir. Wishing you lots of happiness, love, peace and Ayurveda ?????? @anuragkashyap72#missingmypixiehair pic.twitter.com/P59W6tqK83
— Amala Paul ⭐️ (@Amala_ams) September 10, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com